காஷ்மீரில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

காஷ்மீரில் விமானப்படை வீரர் பாதுகாப்பு பணியின் போது தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில், உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த சுபம் சிங் பர்மார் என்பவர் விமானப்படை வீரராக வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். விமானப்படை வீரரின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com