

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம் மற்றும் மீனவர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சட்டம்- ஒழுங்கை பராமரித்திட கடந்த 21ம் தேதி இரவு 10 மணி முதல் 23ம் தேதி காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட முன்னாள் கலெக்டர் என்.வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.