திருமங்கலத்தில் 2-வது மனைவி வீட்டில் வியாபாரி தற்கொலை

திருமங்கலத்தில் 2-வது மனைவி வீட்டில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
திருமங்கலத்தில் 2-வது மனைவி வீட்டில்  வியாபாரி தற்கொலை
Published on

பேரையூர்:

திருமங்கலம் கணபதி நகரைச் சேர்ந்தவர் அயூப்கான் (வயது 48), இரும்பு வியாபாரி. இவருக்கு ஹரினா பேகம், பரக்கத் நிஷா என 2 மனைவிகளும், 3 மகன்களும் உள்ளனர்.

2 மனைவிகளும் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று பரக்கத் நிஷா, கோரிப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

இன்று காலை அவர் வீடு திரும்பினார். வீட்டிற்குள் நுழைந்த பரக்கத் நிஷா, அங்கு கணவர் அயூப்கான் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடந்த சில நாட்களாக அயூப்கான் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com