புரோ கபடியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு 2-வது வெற்றி: உ.பி. அணியை வென்றது

புரோ கபடி போட்டியில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், உ.பி. அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
புரோ கபடியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு 2-வது வெற்றி: உ.பி. அணியை வென்றது
Published on

சோனிபட்:

ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. இன்று அரியானா மாநிலம் சோனிபட்டில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி, உ.பி. யோதா அணியை எதிர்கொண்டது. இதில், தமிழ் தலைவாஸ் அணி 34-33 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற. இது தமிழ் தலைவாஸ் அணியின் 2-வது வெற்றியாகும்.

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி, 2 வெற்றி, 2 தோல்வி மற்றும் இரண்டு டையுடன்  21 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. பெங்கால் வாரியர்ஸ் அணி 50 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com