மேகாலயா நிலக்கரி சுரங்க விபத்து - 2வது சடலம் மீட்பு

மேகாலயா மாநிலத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவினர் 2வது சடலத்தை மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். #Meghalayacoalmine #NavyDivers
மேகாலயா நிலக்கரி சுரங்க விபத்து -  2வது சடலம் மீட்பு
Published on

ஷில்லாங்:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.

தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

ரிமோட் மூலம் இயங்கக்கூடிய சாதனத்தினைக் கொண்டு கடலுக்கடியில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு பணியின்போது கடந்த மாதம் ஒரு உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அதன்பின்னர் சுமார் 370 அடி ஆழத்தில் மேலும் 4 உடல்கள் அழுகி எலும்புக் கூடுகளாக கண்டறியப்பட்டன. அதில், ஒரு உடல் நேற்று மீட்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.  #Meghalayacoalmine #NavyDivers

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com