பாறைகள் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி: திருச்சி கல்குவாரிக்கு சீல் வைப்பு

பாறைகள் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலியானதையடுத்து திருச்சி கல்குவாரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பாறைகள் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி: திருச்சி கல்குவாரிக்கு சீல் வைப்பு
Published on

திருச்சி:

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் இருந்து ரெட்டை மலை செல்லும் வழியில் திருச்சியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யின் உறவினர் ஒருவருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது.

நேற்று திருச்சி புங்கனூர் கொத்தனார் தெருவை சேர்ந்த செந்தில் (வயது 35), அதே ஊர் புதுத்தெருவை சேர்ந்த செல்வம் (45) ஆகியோர் 20 அடி உயர பெரிய பாறையை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பாறைகள் உடைந்து கற்களாக சரிந்து விழுந்ததில் 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இது தொடர்பாக எடமலைப் பட்டிபுதூர் போலீசார் கல்குவாரி உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் மீது 620/2017,304/ஏசி (இந்திய தண்டனை சட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவியல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்குவாரிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com