பிளாட்பார டிக்கெட் 20 ரூபாய்: அக்டோபர் 31-ம் தேதி வரை கட்டணத்தை உயர்த்தியது தென்கிழக்கு ரெயில்வே

தென் கிழக்கு ரெயில்வேக்கு உட்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் பிளாட்பார டிக்கெட் கட்டணத்தை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிளாட்பார டிக்கெட் 20 ரூபாய்: அக்டோபர் 31-ம் தேதி வரை கட்டணத்தை உயர்த்தியது தென்கிழக்கு ரெயில்வே
Published on

கொல்கத்தா:

ரெயில்களில் பயணம் செய்பவர்களை வழியனுப்புவதற்காகவும், வரும் உறவினர்களை அழைத்துச் செல்வதற்காகவும் பலர் ரெயில் நிலையங்களுக்கு வருகை தருவார்கள். குறிப்பாக பண்டிகை காலங்களில் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். இவ்வாறு வரும் அனைவரும் பிளாட்பார டிக்கெட் கட்டாயம் வாங்க வேண்டும். பிளாட்பார டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது பண்டிகை சீசன் தொடங்க உள்ள நிலையில், தென்கிழக்கு ரெயில்வே நிர்வாகம் பிளாட்பார டிக்கெட்டுகளை இரு மடங்காக உயர்த்தி உள்ளது.

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் வரும் 20-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை பிளாட்பார டிக்கெட் கட்டணம் 20 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக தென்கிழக்கு ரெயில்வே செய்தித் தொடர்பாளர் சஞ்சய் கோஷ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com