வள்ளியூரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. தர்ணா போராட்டம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வள்ளியூரில் கலையரங்கம் அருகே எஸ்.டி.பி.ஐ. சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வள்ளியூர்:

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடந்த 6-ந் தேதி முதல் தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து வள்ளியூரில் கலையரங்கம் அருகில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இராதாபுரம் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் உமர்அம்சா தலைமை தாங்கினார். இதில் சுற்றுவட்டார ஜமாத் தலைவர்கள் பீர் ஜலால், முகம்மது ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சலீம் தீன் வரவேற்றார். நெல்லை மாவட்ட பொருளாளர் களந்தை மீராசா மற்றும் பச்சை தமிழகம் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், ஜீனத் ‌ஷராபியா , முகம்மது காசிம், ஜெயக்குமார், கல்யாணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் இணை செயலாளர் சிராஜ் இம்ரான் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com