ஸ்கூட்டர் மீது ஆம்புலன்ஸ் மோதல்: கல்லூரி மாணவிகள் 3 பேர் காயம்

தஞ்சை அருகே ஸ்கூட்டர் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவிகள் 3 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து
விபத்து
Published on

கள்ளப்பெரம்பூர்:

தஞ்சை அருகே உள்ள நடுக்காவேரியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய மகள்கள் கார்த்திகா(வயது18), திவ்யா(17). இவர்களின் தோழி செந்தமிழ்செல்வி(20). கல்லூரி மாணவிகளான இவர்கள் 3 பேரும் ஒரு ஸ்கூட்டரில் நேற்று காலை திருவையாறு -தஞ்சை புறவழிச்சாலையில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். 

சக்கரசாமந்தம் புறவழிச்சாலை அருகே இவர்கள் சென்ற போது மாணவிகள் சென்ற ஸ்கூட்டரும் அந்த வழியாக வந்த ஆம்புலன்சும் மோதிக்கொண்டன. இதில் மாணவிகள் கார்த்திகா, திவ்யா, செந்தமிழ்செல்வி ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com