குருமிராமில் சிறுவன் படுகொலை: ரியான் பள்ளிக்கு சி.பி.எஸ்.சி. நோட்டீஸ்

அரியானா மாநிலம், குருகிராம் நகரில் உள்ள 7 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட நிலையில் அந்தப் பள்ளியின் அனுமதியை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குருமிராமில் சிறுவன் படுகொலை: ரியான் பள்ளிக்கு சி.பி.எஸ்.சி. நோட்டீஸ்
Published on

அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் நகரில் ரியான் இண்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பிராதுமன் (வயது 7) என்ற மாணவன் 2-ம் வகுப்பில் பயின்று வந்தான்.

கடந்த 8-ம் தேதி காலை 8:15 மணியளவில் பிராதுமன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றான். சிறிது நேரத்திற்கு பிறகு சரியாக 8:45 மணிக்கு மாணவன் இறந்து விட்டதாக அவனது தந்தைக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் அளித்துள்ளனர்.

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பள்ளி கழிவறையில் பிணமாக கிடந்த பிராதுமன் உடலுக்கு அருகில் அவனை கொல்வதற்கு பயன்படுத்திய கத்தி கிடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்துவந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்தபோது அந்தப் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் நடத்துநராக பணியாற்றியவன், அந்த சிறுவனை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி, கழுத்தை அறுத்துக் கொன்ற தகவல் அம்பலமானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com