திருவிடைமருதூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆசிரியை கொலை - போலீசார் விசாரணை

திருவிடைமருதூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #TeacherMurdered
ஆசிரியை வசந்தபிரியா
ஆசிரியை வசந்தபிரியா
Published on

திருவிடைமருதூர்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (வயது 24). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று உமா மகேஸ்வரபுரம் காவிரி ஆற்றின் படித்துறையில் வசந்தபிரியா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆசிரியை வசந்தபிரியாவுக்கும், வலங்கைமானை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த மாதம் 28-ந் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வசந்தபிரியா நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார்.

மாலையில் பள்ளி முடிந்ததும் பள்ளியில் இருந்து புறப்பட்ட அவர் வீட்டுக்கு செல்லவில்லை. சம்பந்தமே இல்லாமல் காவிரி ஆற்றின் படித்துறையில் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

அங்கு யாருடன் அவர் வந்தார்? அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. கொலை நடந்த இடத்தில் 2 செல்போன்கள், பேனா கத்தி ஆகியவை கிடந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வருகிறார்கள். #TeacherMurdered

X

Maalai Malar
www.maalaimalar.com