காஷ்மீரில் கழுத்தை அறுத்து பள்ளி ஆசிரியர் படுகொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இன்று கழுத்தை அறுத்து பள்ளி ஆசிரியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் கழுத்தை அறுத்து பள்ளி ஆசிரியர் படுகொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இன்று கழுத்தை அறுத்து பள்ளி ஆசிரியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கட்டிபோரா பகுதியை சேர்ந்தவர், அய்ஜாஸ் அஹமது லோனே. பள்ளி ஆசிரியராக பணியாற்றிவந்த இவரது வீட்டில் கடந்த வாரம் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் அளித்ததாக சந்தேகித்த தீவிரவாதிகள் இன்று காலை அய்ஜாஸ் அஹமது லோனேவின் கழுத்தை அறுத்து தீவிரவாதிகள் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com