மோடியை அவதூறாக சித்தரித்து நாடகம் - தேச துரோக வழக்கில் பள்ளி ஆசிரியை கைது

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து நாடகம் நடத்திய பள்ளி ஆசிரியை மீது போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பிதார்மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 21-ந்தேதி நாடகம் நடத்தப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு ஆகியவை குறித்து நடைபெற்ற இந்த நாடகத்தில் நடித்த மாணவ-மாணவிகள் பிரதமர் மோடியை பற்றி அவதூறாக சித்தரித்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை அமல்படுத்தப்பட்டால் முஸ்லீம்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று நாடகத்தில் தெரிவித்துள்ளனர்.

பள்ளியில் நடத்தப்பட்ட இந்த நாடகத்தை மணவரின் உறவினர் தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பினார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

இதுகுறித்து சமூக ஆர்வலர் நீலேஷ் என்பவர் பிதார் நியூ டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், பள்ளியில் நடத்தப்பட்ட நாடகம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாடகத்தை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராகவும், வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவேற்றியவர் மீதும் போலீசார் கடந்த 26-ந்தேதி தேச துரோக சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழ்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் பள்ளிக்கு சென்று நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நாடகத்தில் பிரதமர் மோடியை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை மாணவர் ஒருவரின் தாயார் தான் இணைத்தார் என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அந்த மாணவரின் தாயார் நஜமுனிசா மற்றும் நாடக காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த தலைமை ஆசிரியை பரிதாபேகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com