மத்தூர் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

மத்தூர் அருகே அக்காள் திட்டியதில் மனமுடைந்த பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த கரடி குள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு தேவிபிரியா (வயது18), தெய்வாணி (14) என்ற 2 மகள்கள் உள்ளனர். செல்வமணி கடந்த சில ஆண்டுகளுக்கு இறந்து போனார். தனது மகள்களை செல்வி கூலிவேலைக்கு சென்று காப்பாற்றி வந்தார்.

தேவிபிரியா பிளஸ்-2 படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். தெய்வாணி அஜிஞ்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தேவிபிரியா தனது தங்கை தெய்வாணியை திட்டியதாக தெரிகிறது. 

தனது அக்கா திட்டியதால் மனமுடைந்த காணப்பட்ட தெய்வாணி வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சிமருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது உறவினர்கள் தெய்வாணியை உடனே மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இன்று காலை தெய்வாணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.  

இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com