பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

கன்னியாகுமரியில் பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய 18 வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
கைது
Published on

இரணியல்:

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த குக்கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பெண் ஒருவரின் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமிக்கும் பக்கத்து வீட்டு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், அந்தச் சிறுமிக்கு கடந்த சில தினங்களாக உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில், பெற்றோர் இரணியலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அந்த சிறுமி 6-மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, பெற்றோர் இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 18 வயது வாலிபரை காதலித்து வந்ததாகவும் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி அவரது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், சிறுமியை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தான் மட்டுமே தவறுக்கு காரணம் இல்லை என்றும் அவர் அழைத்ததின் பேரில்தான் தனிமையில் கழித்ததாகவும் கூறிய அந்த வாலிபர், எனக்கு மட்டும்தான் தண்டனையா எனக் கூறி தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார். போலீசார் அவரை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com