மாரண்டஅள்ளி அருகே பள்ளி மாணவி மாயம்

மாரண்டஅள்ளி அருகே பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
மாணவி மாயம்
மாணவி மாயம்
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பெரியதோரணபெட்டம் அடுத்த சீடிபெட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் தீபா (வயது 15). மாரண்டஅள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சேகர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் தீபா கிடைக்கவில்லை. எனவே சேகர் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத் தில் எனது மகளை காண வில்லை எனவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் புகார் செய்தார். 

இது குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தீபாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com