வேலூரில் பள்ளி மாணவி மாயம்

வேலூரில் 15 வயது பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாயம்
மாயம்
Published on

வேலூர்:

வேலூர் நகரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அரசுப்பள்ளி ஒன்றில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த மாணவி திடீரென காணாமல் போனார். அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் மாணவியை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து மாணவியின் தாயார் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், எனது மகளை கொசப்பேட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். எனது மகளை உடனடியாக கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன மாணவியையும், அவரை கடத்தி சென்றதாக சந்தேகிக்கப்படும் வாலிபரையும் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com