சங்கரன்கோவிலில் பள்ளி மாணவி மாயம்

சங்கரன்கோவிலில் உறவினர் வீட்டுக்கு சென்ற பள்ளி மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவரை தேடி வருகிறாகள்.
மாயம்
மாயம்
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பாரதிநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் அசன் மைதீன். இவரது மனைவி நூர்ஜகான்(வயது 40). இவர்களது 15 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு படிப்பு சரியாக வராததால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது தாயின் உறவினர் வீட்டுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சங்கரன்கோவில் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com