தூத்துக்குடியில் பள்ளி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம்- தொழிலாளி கைது

தூத்துக்குடியில் பள்ளி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் பள்ளி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம்- தொழிலாளி கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அய்யர்விளையை சேர்ந்தவர் அந்தோணி பாக்கியம் (வயது 48). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணிற்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். அவள் தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். திருமணத்திற்கு பின்னர் அந்த பெண் தனது மகளுடன் அந்தோணி பாக்கியம் வீட்டில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் சிறுமியிடம் அந்தோணி பாக்கியம் அடிக்கடி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தொழிலாளி அந்தோணி பாக்கியத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com