ஓசூரில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

தேன்கனிக்கோட்டை அருகே நடந்து சென்று கொண்டிருந்த மாணவன் எதிர்பாரத விதமாக ஏரியில் மூழ்கி பலியானார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா இருதாளம் பக்கமுள்ள நெருப்புகுட்டை பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் தனுஷ் (வயது 15). இவர் பொம்மாண்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனுஷ் ஓசூர் அருகே உள்ள காரப்பள்ளி ஏரி பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி மாணவர் தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர்கள் இது குறித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com