சங்கரன்கோவில் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
Published on

சங்கரன்கோவில்:

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே உள்ள இனாம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால். இவரது மகன் பொன்ராஜ் (வயது14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொன்ராஜ் நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பால்வண்ணநாதபுரத்தில் உள்ள தனது தாத்தா கனகவேல் வீட்டிற்கு வந்திருந்தார். இவரது பேரன் பொன்ராஜ் (வயது 14). இவர் இனாம் கோவில்பட்டியில் வசித்து வருகிறார். அங்குள்ள தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக பால்வண்ணநாதபுரத்தில் உள்ள தாத்தா கனகவேல் வீட்டிற்கு வந்திருந்தார்.

பொன்ராஜ் ஊருக்கு கிழக்கே உள்ள ராமசுப்பு என்பவரது கிணற்றில் குளிக்க சென்றார். குளித்துக்கொண்டிருந்த போது அவருக்கு வலிப்பு நோய் வந்தது. இதில் தண்ணீரில் மூழ்கி பொன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறிந்த வந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com