5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பள்ளி தலைமை ஆசிரியர் கைது

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் 5 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பள்ளி தலைமை ஆசிரியர் கைது
Published on

காரைக்கால்:

காரைக்கால் மாவட்டம் சேத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 5 வயது சிறுமி கடந்த 18-ம் தேதி பள்ளி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளாள். அவள் மிகவும் சோர்வாக இருப்பதை கண்ட பெற்றோர்கள் குழந்தையிடம் விசாரித்துள்ளனர். அதில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பக்கிரிசாமி குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உண்மை வெளிவந்துள்ளது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனையடுத்து பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று இரவு பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

இந்த குற்றத்தில் பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவரை கைது செய்ய கூறியும் குழந்தையின் பெற்றோர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என கூறி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com