போளூரில் பள்ளி பஸ்-தனியார் பஸ் மோதல்: குழந்தைகள் உள்பட 20 பேர் காயம்

போளூரில் பள்ளி பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் குழந்தைகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
போளூரில் பள்ளி பஸ்-தனியார் பஸ் மோதல்: குழந்தைகள் உள்பட 20 பேர் காயம்
Published on

போளூர்:

ஆரணி அடுத்த கஸ்தம் பாடியில் உள்ள தனியார் பள்ளி பஸ், இன்று காலை போளூரில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டிருந்தது.

அப்போது, திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த தனியார் பஸ், பள்ளி பஸ்சின் பின்னால் மோதியது.

இந்த விபத்தில் பின்பக்க கண்ணாடி உடைந்து பள்ளி பஸ் சேதமடைந்தது. அதேப் போல், தனியார் பஸ் முகப்பு கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 5 பேர் மற்றும் பயணிகள் 15 பேர் என மொத்தம் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பள்ளிக் குழந்தைகள் உயிர் தப்பினர்.

போளூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com