

திருப்பூர்:
திருப்பூர் ராக்கியா பாளையம் பிரிவு வி.ஜி.வி. கார்டன் பகுதியில் மத பாடசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இங்கு படிக்கும் சில மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சூடு வைத்து சித்ரவதை செய்வதாக புகார் எழுந்தது. சுமார் 5 மாணவிகளுக்கு சூடு வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக அப்பள்ளியில் படிக்கும் திருப்பூர் பாண்டியன் நகர் காதர்பாட்ஷா மகள் சுமையாள் என்ற மாணவி தனது பெற்றோர் மூலம் போலீஸ் கமிஷனர் நாகராஜனிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாணவிகளை பிரம்பால் அடித்து மெழுகுவர்த்தி மூலம் சூடு வைத்து சித்ரவதை செய்தது தெரிய வந்தது.
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து பள்ளி நிர்வாகிகள் நவாஸ் அவரது மனைவி ஆயிஷா ஆகியோரை கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகி விட்டார்.
அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.