கார்த்தி சிதம்பரத்தின் 10 கோடி ரூபாயை விடுவிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்

வெளிநாடு செல்வதற்கு நிபந்தனையாக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த 10 கோடி ரூபாயை இப்போது விடுவிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
Published on

மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தில் 3,500 கோடி ரூபாயை முதலீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதற்கிடையே கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்று வருவதற்கு அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். மனவை விசாரித்த நீதிமன்றம், வெளிநாடு செல்வதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி அளித்தது. அத்துடன், வைப்புத் தொகையாக 10 கோடி ரூபாயை செலுத்தும்படி உத்தரவிட்டது. அதன்படி கார்த்தி சிதம்பரம் 10 கோடி ரூபாயை உச்ச நீதிமன்ற கருவூலத்தில் டெபாசிட் செய்து இருந்தார்.

இதேபோல் டெபாசிட் தொகையை விடுவிக்கும்படி கடந்த மே மாதம் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com