

லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார். 2 ஆயிரம் ரூபாய் நோட்டு எடுக்க முயன்றார். ஆனால், ஏ.டி.எம்.மில் இருந்து போலியான 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வந்ததை கண்டு அதிர்ந்தார். இதேபோல், வேறு ஒருவர் பணம் எடுத்தபோது கிழிந்த நோட்டுகள் வந்துள்ளன.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு வந்து போலியான நோட்டுகளை கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews