புதிய ஆண்ட்ரய்டு ஒன் ஸ்மார்ட்போன்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ஜப்பான் மின்னணு நிறுவனமான ஷார்ப் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. ஷார்ப் எக்ஸ் 1 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதிய ஆண்ட்ரய்டு ஒன் ஸ்மார்ட்போன்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Published on

டோக்கியோ:

ஜப்பான் நாட்டை சேர்ந்த மின்னணு தயாரிப்பு நிறுவனமான ஷார்ப் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. ஷார்ப் எக்ஸ் 1 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் ஏற்கனவே அந்நிறுவனம் வெளியிட்ட ஷார்ப் அக்யோஸ் 507SH மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 2016-இல் வெளியிடப்பட்டது. 

புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனிற்கு 18 மாதங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் உறுதியாக வழங்கப்படும் என ஷார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஷார்ப் எக்ஸ்1 சிறப்பம்சங்கள்:

* 5.3 இன்ச் ஃபுல் எச்டி IGZO டிஸ்ப்ளே 

* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்

* 3 ஜிபி ரேம்

* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி 

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்

* 16.4 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* கைரேகை ஸ்கேனர்

* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

* 3900 எம்ஏஎச் பேட்டரி

அன்லாக் செய்யப்பட்ட ஷார்ப் எக்ஸ்1 ஸ்மார்ட்போன் ஜப்பானில் JPY 70,524 அதாவது இந்திய மதிப்பில் ரூ.40,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஷார்ப் எக்ஸ்1 மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. மற்ற சந்தைகளில் வெளியிடுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com