கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதை நானே பார்த்தேன்: நீக்கப்பட்ட மந்திரி பரபரப்பு புகார்

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் வாங்குவதை தான் பார்த்ததாக, ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மந்திரி கபில் மிஸ்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதை நானே பார்த்தேன்: நீக்கப்பட்ட மந்திரி பரபரப்பு புகார்
Published on

புதுடெல்லி:

டெல்லி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த கபில் மிஷ்ராவை, அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி நீக்கம் செய்தார். பல இடங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சர் நீக்கப்பட்டதாக துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்தார். 

இந்நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் வாங்குவதை தான் பார்த்ததாக, ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மந்திரி கபில் மிஸ்ரா குற்றஞ்சாட்டியுள்ளார். 

சுகாதாரத் துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடியை கெஜ்ரிவால் பெற்றதாக மிஸ்ரா கூறினார். இதனால் டெல்லி அரசியல் களம் திரும்பவும் சூடுபிடித்துள்ளது. 

இதனையடுத்து கெஜ்ரிவாலுக்கு எதிராக போலீசர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வும், சிபிஐ விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு என்று கூறியுள்ள துணை முதல்வர் மணிஷ் சிசோடியோ ஆதாரங்கள் இல்லாமல் மிஸ்ரா புகார் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com