தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை 157 ரன்னில் சுருண்டது

செஞ்சூரியனின் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்சில் 157 ரன்னில் சுருண்டது.
அன்ரிச் நோர்ஜே
அன்ரிச் நோர்ஜே
Published on

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் இன்று செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

கருணாரத்னே, குசால் பேரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2 ரன் எடுத்த நிலையில் கருணாரத்னே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திரிமானே 17 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 0 ரன்னிலும் வெளியேறினர்.

அதன்பின் அன்ரிச் நோர்ஜோ அபாரமாக பந்து வீசினார். குசால் பேரேரா 67 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் தென்ஆப்பிரிக்கா 157 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

தென்ஆப்பிரிக்கா அணியின் அன்ரிச் நோர்ஜோ 14.3 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com