முதல் ரன் எடுக்க 54 பந்துகளை சந்தித்த புஜாரா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் புஜாரா தனது ரன் கணக்கை தொடங்குவதற்கு 54-வது பந்துகளை சந்தித்துள்ளார். #SAvIND #Pujara
முதல் ரன் எடுக்க 54 பந்துகளை சந்தித்த புஜாரா
Published on

இந்திய கேப்டன் விராட் கோலி அடுத்தடுத்து டெஸ்டுகளில் ஒரே மாதிரியான அணியை இறக்குவதில்லை. இந்த போட்டியையும் சேர்த்து தொடர்ந்து 35 டெஸ்டுகளில் அவர் ஆடும் லெவன் அணியில் மாற்றம் செய்திருக்கிறார்.

இந்த டெஸ்டில் இந்திய அணியில் இருந்து முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கழற்றி விடப்பட்டார். புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா மற்றும் வேகப்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா என்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பிடித்தனர். முதன்மை சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்திய அணி களம் இறங்குவது கடந்த 6 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2012-ம் ஆண்டு பெர்த்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி பிரதான சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் கண்டது.

ஆமை வேகத்தில் ஆடிய இந்திய வீரர் புஜாரா இந்த டெஸ்டில் தான் சந்தித்த 54-வது பந்தில் தான் முதல் ரன்னை எடுத்தார். ரன் கணக்கை தொடங்குவதற்கு அதிக பந்துகளை எதிர்கொண்ட 2-வது இந்திய வீரர் புஜாரா ஆவார். 1994-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இந்தியாவின் ராஜேஷ் சவுகான் 57-வது பந்தில் முதல் ரன்னை எடுத்ததே இந்த வகையில் மோசமான சாதனையாக இருக்கிறது. சச்சின் தெண்டுல்கர் 45 பந்துகளிலும் (ஜிம்பாப்வேக்கு எதிராக, 2002-ம் ஆண்டு) ராகுல் டிராவிட் 41 பந்துகளிலும் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2007-ம் ஆண்டு) தங்களது முதல் ரன்னை எடுத்த நிகழ்வுகளும் உண்டு. மொத்தத்தில் இங்கிலாந்தின் ஜான் முர்ரே 1962-63-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் தனது முதல் ரன்னை 79 பந்துகளில் எடுத்து முதலிடம் வகிக்கிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com