3-வது டெஸ்டில் வாங்கிய அடியால், முதல் மூன்று போட்டியில் டி வில்லியர்ஸ் அவுட்

ஜோகன்னஸ்பர்க் டெஸ்டின் போது டி வில்லியர்ஸின் வலது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் மூன்று ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். #SAvIND #DeVilliers
3-வது டெஸ்டில் வாங்கிய அடியால், முதல் மூன்று போட்டியில் டி வில்லியர்ஸ் அவுட்
Published on

கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியின்போது ஆடுகளம் மிகவும் அபாயகரமானதாக செயலாற்றியது. குட் லெந்தில் (Good Length) வீசிய பந்துகள் கூட தலைக்கு மேல் பவுன்சராக கிளம்பியது. இதனால் பேட்ஸ்மேன்கள் கடும் சிரமம் பட்டனர். இந்திய வீரர்கள் விராட் கோலி, புஜாரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடி வாங்கினர். குறிப்பாக பந்து பவுன்சர் ஆகி வலது கை பெருவிரல், ஆள்காட்டி விரல்களை பதம் பார்த்தது.

தென்ஆப்பிரிக்கா வீரர்களையும் பவுன்சர் விட்டு வைக்கவில்லை. இதனால் அவர்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குளவ் உடன் பேட்டிங் செய்தனர். இருந்தாலும் டி வில்லியர்ஸின் வலது கை ஆட்காட்டு விரலை பந்து பதம் பார்த்தது. இதனால் ஏற்பட்ட காயம் வீரியம் உடையதாக இருந்துள்ளது. இந்த காயம் முழுவதும் குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து டி வில்லியர்ஸ் விலகியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com