டர்பனில் இமாலய இலக்கு- 417 ரன்களை நோக்கி தென்ஆப்பிரிக்கா

டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவிற்கு 417 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. #SAvAUS
டர்பனில் இமாலய இலக்கு- 417 ரன்களை நோக்கி தென்ஆப்பிரிக்கா
Published on

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா ஸ்டார்க் (5), நாதன் லயன் (3) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 162 ரன்னில் சுருண்டது. டி வில்லியர்ஸ் மட்டும் கடைசி வரை தாக்குப்பிடித்து 71 ரன்கள் எடுத்தார்.

முதல் இன்னிங்சில் 189 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை எதிர்த்து ரன் அடிக்க ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். தொடக்க வீரர் பான்கிராப்ட்டை (53) தவிர மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருக்கும்போது நேற்றைய 3-வது நாள் ஆட்டம் வெளிச்சமின்மையால் முடிவு பெற்றது.

கம்மின்ஸ் 17 ரன்னுடனும், ஹசில்வுட் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்மட் தொடங்கியது. கம்மின்ஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 2-வது இன்னிஙசில் 74.4 ஓவரல் 227 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சில் 189 ரன்கள் முன்னிலைப் பெற்றதால், ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 416 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 417 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com