ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்

சவுதி அரேபியா நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்
Published on

ரியாத்:

சவுதி அரேபியா நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சவுதி அரபேியாவின் தலைநகராக இருப்பது ரியாத். இங்குள்ள சர்வதேச விமான நிலையம் அருகே வடகிழக்கு பகுதியில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் விமானங்களை குறிவைத்து நடத்தப்பட்டது என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக செய்தி நிறுவனங்கள் கூறுகையில், ஏவுகணை தாக்குதல் தொடர்பான சேத விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இது சுமார் 500 கி.மீ., வரை சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை வகையை சார்ந்தது என தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com