

புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் சுமார் 1.45 லட்சம் கோடி ரூபாய் (440 கோடி அமெரிக்க டாலர்கள்) முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்சாலை நிறுவப்படுகிறது. இந்த ஆலையின் 50 சதவீதம் பங்குகளை வாங்க சவுதி அரேபியா நாட்டு அரசுக்கு சொந்தமான அராம்கோ பெட்ரோலிய உற்பத்தி நிறுவனம் இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.
மீதமுள்ள 50 சதவீதம் பங்குகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுனங்களிடம் இருக்கும்.
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச எரிசக்தி அமைப்பு கருத்தரங்கத்தின்போது இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா நாட்டின் பெட்ரோலியத்துறை மந்திரி காலித் அல்-ஃபாலி கையொப்பமிட்டார்.
6 கோடி டன் உற்பத்தி திறனுடன் உருவாக்கப்படும் இந்த சுத்திகரிப்பு ஆலைக்கு தேவையான பெட்ரோலிய கச்சா எண்ணையில் 50 சதவீதம் அளவுக்கு அராம்கோ நிறுவனம் அனுப்பிவைக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. #tamilnews #oilrefinery #SaudiAramco