

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை முடிவு செய்து அறிவித்தால் தேர்தலை நடத்துவோம்.
அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் வழக்கு இன்னும் முடிவுக்கு வராததால் அதில் தற்போது தேர்தல் நடத்த இயலாது. திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு கிடைத்து விட்டது. அதை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி உள்ளோம்.
தேர்தல் வேட்புமனு பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் உள்ளனர். அவர்களது பேச்சில் ஏதாவது விதிமீறல் இருந்தால் விளக்கம் கேட்கப்படும்.
தமிழகத்தில் இதுவரை ரூ. 30 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.4.45 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. 209 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 310 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 94 கிலோ தங்கம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.