

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள சத்திரடிக்குடியை அடுத்துள்ள நெடிய மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 70). இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமு, தனது நிலத்தில் பருத்தி பயிரிட்டார். மழை பொய்த்ததால், பருத்தி கருகியது. இதனால் ராமு விரக்தியுடன் காணப்பட்டார். கடன் கொடுத்தவர்களும் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.
மனவேதனையில் இருந்த ராமு ஊர் சுடுகாடு அருகே உள்ள தனியார் தோட்டத்துக்கு சென்றார். அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உறவினர் சாந்தலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சத்திரக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.