சாத்தான்குளம் அருகே கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

சாத்தான்குளம் அருகே மாணவனின் காதல் தொல்லை தாங்காமல் கல்லூரியில் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாத்தான்குளம் அருகே கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
Published on

சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மணப்பாட்டை சேர்ந்தவர் செல்வன். இவரது மகள் ஜெயபாரதி(வயது 20). இவர் தட்டார்மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே கல்லூரியில் இடைச்சிவிளையை சேர்ந்த முத்து மகன் ரவிகுமார்(21) என்பவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அடிக்கடி மாணவி ஜெயபாரதியிடம் சென்று தன்னை காதலிக்க வேண்டும் என கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஆனால் அதற்கு மாணவி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை ஜெயபாரதியிடம் மீண்டும் மாணவன் ரவி குமார், என்னை காதலிக்க வேண்டும் என தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி கல்லூரி மாடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் முறிந்தது. இதனால் வலியில் துடித்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவனின் காதல் தொல்லை தாங்காமல் கல்லூரியில் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவன் ரவிகுமார் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com