சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: போலீஸ்காரர் முருகன் ஜாமீன் கேட்டு மனு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான போலீஸ்காரர் முருகன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது சிபிஐ பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த தந்தை-மகன்
உயிரிழந்த தந்தை-மகன்
Published on

மதுரை:

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலர், தங்களுக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அந்த வழக்கில் சிறையில் உள்ள போலீஸ்காரர் முருகன் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து சி.பி.ஜ. பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com