பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இன்று சசிகலா -தினகரன் சந்திப்பு ரத்து

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இன்று சசிகலாவை, தினகரன் சந்திப்பதாக இருந்த நிலையில் தற்போது இந்த சந்திப்பு திடீரென்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இன்று சசிகலா -தினகரன் சந்திப்பு ரத்து
Published on

பெங்களூரு:

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இன்று பகலில் சசிகலாவை தினகரன் சந்திப்பதாக இருந்தது. அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் சென்று சசிகலாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால் தற்போது இந்த சந்திப்பு திடீரென்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் சிறை நிர்வாகம் சசிகலாவை சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிய வந்து உள்ளது.

இது பற்றி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களிடம் கேட்ட போது அவர்கள் இதை மறுத்தனர் இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

தற்போது சென்னை ஐகோர்ட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களாகிய நாங்கள் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளதால் அந்த வழக்கின் தீர்ப்பை பார்த்த பிறகு வேறு ஒரு நாளில் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். இதனால் இன்று அவரை சந்திப்பது ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com