சசிகலா சுடிதார் அணிந்திருக்கும் புதிய படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா சுடிதார் அணிந்து சிறையில் நிற்பதாக கூறி ஒரு படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சசிகலா
சசிகலா
Published on

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் ரூ.2 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டு சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்தியது.

இந்த காலக்கட்டத்தில் சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வருவது போன்ற வீடியோக்கள் வெளியாகின. சிறை அறையில் பாத்திரங்கள் இருப்பது போன்ற படங்களும் வெளியாகின. உயர்மட்ட குழு விசாரணை நடத்தி மாநில அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அதன்பிறகு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து ஊழல் தடுப்புபடை விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com