ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராக மாட்டார்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராக மாட்டார் என்றும், அவருக்கு பதில் அவரது வக்கீல் செந்தூர்பாண்டியன் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RajaSenthoorPandian #JayaDeathCase #Jayalalithaa #Sasikala
ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராக மாட்டார்
Published on

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதில் தினமும் ஏராளமானோர் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகிறார்கள்.

ஏற்கனவே அரசு டாக்டர் பாலாஜி, அக்குபஞ்சர் டாக்டர் சங்கர், தி.மு.க. பிரமுகர் டாக்டர் சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், மகள் தீபா, அவரது கணவர் மாதவன், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர்கள் ராமமோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கும், சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார். இதையடுத்து அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.


இந்த நிலையில் சசிகலா உறவினரும், இளவரசியின் மகளுமான கிருஷ்ண பிரியா இன்று காலை சேப்பாக்கத்தில் உள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ பற்றி விளக்கம் அளித்தார்.

சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் தனக்கு அசல் சம்மன் கொடுத்த பிறகு தான் ஆஜராவது பற்றி தெரிவிப்பதாக சசிகலா கூறி இருந்தார்.

இந்த நிலையில் விசாரணை கமி‌ஷன் முன்பு சசிகலா ஆஜராக மாட்டார் என்றும், அவருக்கு பதில் அவரது வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com