ஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா குடும்பத்தினர் சொத்து குவித்துள்ளனர்: கே.பி முனுசாமி

ஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா குடும்பத்தினர் சொத்துக்களை குவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா குடும்பத்தினர் சொத்து குவித்துள்ளனர்: கே.பி முனுசாமி
Published on

கிருஷ்ணகிரி:

ஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா குடும்பத்தினர் சொத்துக்களை குவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான ஜெயா டி.வி உள்ளிட்ட பல நிறுவனங்களும், உறவினர்களின் வீடுகளிலும் நான்கு நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள், ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக்கின் 100 வங்கிக்கணக்குகளை முடக்கியுள்ளனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, ‘வருமான வரி சோதனைக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் தொடர்பு இல்லை, ஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா குடும்பத்தினர் சொத்துக்களை குவித்துள்ளனர்’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com