பீர்க்கன்கரணையில் ஜவுளிக்கடையில் புடவை திருடிய 2 பெண்கள் கைது

பீர்க்கன்கரணையில் ஜவுளிக்கடையில் 10-க்கும் மேற்பட்ட புடவைகளை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சென்னை:

பெருங்களத்தூர், பாரதி நகர் பஸ் நிலையம் அருகில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் கவுரி.

நேற்று மதியம் 2 பெண்கள் இந்த கடைக்கு சென்று புடவைகள் வாங்குவதற்காக வந்தனர். நீண்ட நேரத்துக்கு பிறகு ஒரு புடவையை எடுத்துக் கொண்டு அதற்கான தொகை ரூ.800 செலுத்தினார்கள்.

பின்னர் ஒரு டாடா சுமோ காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர்.

சந்தேகமடைந்த கவுரி சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது 2 பெண்களும் புடவை வாங்குவது போல நடித்து, 10-க்கும் மேற்பட்ட புடவைகளை தங்களுக்குள் மறைத்து எடுத்துக்கொண்டதும், ஒரு புடவைக்கு மட்டும் பணம் செலுத்தி விட்டு தப்பியதும் தெரிய வந்தது.

இது குறித்து கவுரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பீர்க்கன்கரணை ரோந்து போலீசார் அப்பகுதியில் சென்ற டாடா சுமோ காரை மடக்கிப்பிடித்தனர். காரில் சென்ற 2 பெண்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பீர்க்கன்கரணை போலீசார் பிடிபட்ட பெண்களான தேனியை சேர்ந்த லட்சுமி(38), நாகம்மாள்(60) ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்போது 2 பெண்களும் புடவைகளை தங்களுக்குள் மறைத்து எடுத்து கொண்டு தப்பியது தெரியவந்தது.

இதையடுத்து 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 12 புடவைகள், அவர்கள் சென்ற கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com