சரவணம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

சரவணம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரவணம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Published on

கோவை:

ஈரோடு மாவட்டம் கோபி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 65). இவர் சரவணம்பட்டி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். நேற்றுஇரவு சரவணம்பட்டி சத்திரோட்டில் நடந்து சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தர்மலிங்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

சம்பவஇடத்துக்கு போக்கு வரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது எஸ்.எஸ்.குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ரோகித்(18) என்பது தெரிய வந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com