வருமான வரி சோதனை: ஜெயலலிதா தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்- சரத்குமார்

போயஸ் இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனை என்பது ஜெயலலிதா மீது பாசம் கொண்ட தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
வருமான வரி சோதனை: ஜெயலலிதா தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்- சரத்குமார்
Published on

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று கோவை வந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவரிடம் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து சரத்குமார் கூறியதாவது:-

வருமானவரித்துறை சோதனை என்பது சகஜமான ஒன்று. அவர்கள், அவர்களது வேலையை பார்க்கின்றனர்.


போயஸ் இல்லம் என்பது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த வீடு. இந்த சோதனை அவர் மீது பாசம் கொண்ட தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும், மன வேதனையை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com