சரத்குமார் - சீமான் புதிய கூட்டணி: இணைந்து செயல்பட போவதாக அறிவிப்பு

தமிழகத்தின் நலன் கருதி பல்வேறு பிரச்சினைகளில் இருவரும் இணைந்து செயல்படுவோம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
சரத்குமார் - சீமான் புதிய கூட்டணி: இணைந்து செயல்பட போவதாக அறிவிப்பு
Published on

சென்னை:

தமிழக அரசியலில் ரஜினியும், கமலும் இறங்கி விட்டார்கள், இருவரும் தனித்தனி கட்சிகள் தொடங்குகிறார்கள். புதிதாக தொடங்க இருக்கு கட்சிக்கு தொண்டர்களை திரட்டும் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

கட்சி தொடங்கிய பிறகு இருவரும் கூட்டணி சேருவார்களா என்ற கேள்வி இருக்கிறது.

ஆனால் சமத்துவ மக்கள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் கூட்டாக இதை அறிவித்தனர்.

மதுரை விமான நிலையத்தில் இருவரும் கூட்டாக இதை அறிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:-

மாநிலத்தில் சக்தி வாய்ந்த தலைவராக விளங்கிய ஜெயலலிதாவை இழந்து அ.தி.மு.க. பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கென எந்த திட்டமும் இல்லை. தனி நபர் வருமான உச்சவரம்பை உயர்த்தாதது வேதனையானது.

கார்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தான் பட்ஜெட் தயாரித்துள்ளனர். பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டே பட்ஜெட் தயாரித்துள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. இனி எஞ்சியிருக்கும் ஒரு ஆண்டில் எதுவும் செய்ய முடியாது.

தமிழகத்தின் நலன் கருதி பல்வேறு பிரச்சினைகளில் இருவரும் இணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com