சங்கராபுரம் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி தற்கொலை

சங்கராபுரம் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே உள்ள ரிஷிவந்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ராமச்சந்திரன்(வயது 39). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு மேனகா(35) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் தனிமையில் இருந்து வந்த ராமச்சந்திரன் வேலை தேடி சென்று புதுப்பாலப்பட்டு கிராமத்தில் கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் அங்குள்ள சுடுகாடு அருகே வேப்பமரத்தில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்து ராமச்சந்திரன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது அண்ணன் சீனுவாசன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com