சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி

சங்கரன்கோவில் அருகே மின்கம்பத்தில் ஏறி வேலை செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
Published on

நெல்லை:

சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்ன செல்வம் (வயது37). இவர் குருவிகுளம் பகுதியில் மின்வாரிய வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று மின் கம்பத்தில் ஏறி வேலை செய்த போது, எதிர் பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அன்னசெல்வத்தை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அன்னசெல்வம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com