சங்கரன்கோவிலில் கோர்ட்டு ஊழியர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை

சங்கரன்கோவிலில் குடும்பத்துடன் குற்றாலத்துக்கு சென்றிருந்த கோர்ட்டு ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு
Published on

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஏ.வி.ஆர். எம்.வி. காலனி ஆத்தியடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது55). இவர் தென்காசி கோர்ட்டில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு சுமார் 8.30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் குற்றாலத்திற்கு சென்றார்.

பின்னர் அருவிகளில் குளித்து விட்டு இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் அவர் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

இச்சம்பவம் குறித்து வேலுச்சாமி சங்கரன் கோவில் தாலுகா போலீசில் புகார் செய்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

 தடயவியல் நிபுணர்கள் அங்கு சோதனை செய்வதையும் படத்தில் காணலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com