போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகிணி, சஞ்சனா சட்டவிரோதமாக வருமானம் ஈட்டியது அம்பலம்

போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டியது தொடர்பாக குற்றப்பத்திரிகையில் போலீசார் தகவல்களை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி
சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி
Published on

பெங்களூரு :

பெங்களூருவில் நடந்த போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ஜாமீன் மனுக்களை ஏற்கனவே கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக சிறையில் இருந்து வெளியே வரமுடியாமல் நடிகைகள் தவித்து வருகின்றனர்.

ஏற்கனவே நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தது, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடித்துவிட்டு குற்றப்பத்திரிக்கை தயார் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த குற்றப்பத்திரிக்கையில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து இருப்பது தொடர்பாக போலீசார் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதாவது கடந்த 2 ஆண்டுகளில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி ஆகியோர் சேர்த்திருக்கும் சொத்துக்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் சம்பாதித்து இருப்பது தொடர்பாக போலீசார் தகவல்களை திரட்டி குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர்.

அதன்படி நடிகை ராகிணிதிவேதி கடந்த 2 ஆண்டுகளில் ரூ.6 கோடி சொத்து சேர்த்து இருப்பதாகவும, நடிகை சஞ்சனா கல்ராணி ரூ.14 கோடி சொத்து சேர்த்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் பெரிய பட்ஜெட் படங்களில் எதுவும் நடிக்கவில்லை என்றும், சினிமா மூலம் அவர்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை, விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மற்றும் அதில் கலந்து கொள்பவர்களிடம் பணம் வசூலித்தது உள்பட சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சட்டவிரோத வருமானம் தற்போது நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு பெரும் பின்னடைவாக இருப்பதாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com